விழித்திருக்கும்
இந்த கடலை
அதிகபட்சமாக
என்ன செய்துவிடலாம்?
வலைகள் சலிக்கும் போது
படகேறச் சொல்லலாம் கடலை.
நதி கலந்தாலும்
கன்னி கழியாத கடலாக்கலாம் மேலும்.
இத்தனை நிகழ்ந்த பின்பாகவும்
மீன் விழித்திருக்கிறதென அறிக.
மிக இலகுவாகவே
எனது கடலை தாண்டி விடுகிறாள்
மற்றோர் மச்சமாக.
-லலித்தா-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக