விடியும் காலையிலும்
விழிநீர் முந்தியடிக்கும்.
நாளெல்லாம் காலடியில்
நரகமாய் நழுவவே!
கடந்த காலங்களை
கைவிரல் கடத்திச்செல்லும்.
தலையணைக் கூட,
தாய்மடியாக!
தவறுகளெல்லாம்
சரியெனப்போகும்.
பிணவறைத்தேடி
முன்னங்கால்ச்செல்ல
பிழையெனத்தள்ளி
பின்னங்கால் இழுக்கும்.
பித்தனைப்போல
குமுறும் வார்த்தையும்
புத்தனைப்போல
அடங்கி நிற்கும்.
மெய்யாகி வரும்
உறவைக்கூட
பொய்யோ! என
புறம் தள்ளி வைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக