" கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்"
{கட்டுரை தொகுப்பு}
நூலாசிரியர்
வைத்திய கலாநிதி திரு த.ஜீவராஜ்
அவர்கள்
தந்தை, மகன் ,பேரன் என்று தொடரும் தலைமுறைகளின் தேடலே
"கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்"
எழுத்தாளனின் கனவு ,கற்றல், எண்ணப்பாடு , அனுபவம் , ஆளுமை
அனைத்தும் சேர்ந்தே தனது ஆக்கத்தை வெளியிடுகிறான் .
அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லும் இந்த வரலாற்று ஆவணங்களை தேடி பெறுவதில் உள்ள சிரமம் அளப்பெரியது.
174 பக்கங்களைக் கொண்ட இப்பொத்தகம் பெரும் படைப்புக்களில் ஒன்றே......
இவ் நூலில் 22 கல்வெட்டும் அதில் காணப்பட்ட வாசகங்களுமே இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
திருக்கோணமலையினை ஆட்சி செய்த வன்னிபங்கள் ,தேவரடியார்கள், அண்ணாவிமார்கள்,
திருக்கோணேஸ்வரம் போன்ற வரலாற்று அம்சங்கள் இந்நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோணமலைப்பற்று வன்னிமைகள் பற்றியும்,
அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்கள் , குறிப்புகள்,
உயில்கள் என்பன இந்நூலில் அறியக்கூடியதாக உள்ளது.
சொத்துரிமை தொடர்பாகவும், திருமணம் தொடர்பாகவும், சமயமுறைகள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளதே சிறப்பம்சம்.
ஆலய திருப்பணிகள் பற்றிய விபரங்கள் கோணேசர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளார்.
வேள்விகள், நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா
உருவவழிப்பாடாகவும்
பத்தினித்தேவி திருவிழா,மூர்க்கமாதா வேள்வி, கந்தளாய் குளத்து மகா வேள்வி, நாயன்மார்திடல் மடை வைபவம் என்பன அருவ வழிப்பாடாகவும் தெளிவாக பதிவிடுகின்றார்.
தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல் தனியாக ஒரு பக்கத்தில் இடம் பெறுகின்றது.
நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலானவை இலவசமாக மேடையேற்றப்பட்டதாகவும், ஒத்திகை காணவே பெருந்திரளான ரசிக பெருமக்கள் ஒன்று கூடியதாகவும், மகிழ்வான தருணமாக நினைவுக்கூறுகின்றார்.
கழனிமலைக் கல்வெட்டுகள்
திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான சில விக்கிரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
பின்பு முறையாக பிரதிஸ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டதாகவும் இதனாலே இவ்வாலயத்தின் பெயர் ஆதிகோணநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டதாகவும் ஆசிரியர் தகுந்த ஆதாரங்களை காட்டி ஆவணப்படுத்துகின்றார்.
கழனி மலைப் பிரதேசத்தை இன்றைய நாட்களில் உல்பத்வெவ என்ற அழைக்கின்றனர்.
அங்கே கல்வெட்டுக்கள் நடுகல், புரதான படிக்கட்டுக்கள்,
கட்டிட அழிப்பாடுகள்,
வற்றாத நீர்ச்சுனை போன்ற தொல்பொருட்கள் இன்றும் காணலாம்......
துளைக்கொண்ட ஆபூர்வ பானை கந்தளாயில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதாகவும்,
தூண் சிதைவுகள், ஆவுடையார், கல்வெட்டுக்கள்,சிவன் பார்வதி சிலை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும்
வரலாற்று ஆதாரங்களும், பண்பாட்டுச் சின்னங்களும் அழிந்து போவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார்கள்.
தம்பலகாம பிரதேசங்களில் உள்ள தன்னார்வலர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,
ஆலய பரிபாலன சபையினர்,
புலம் பெயர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து முறையாகப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் அருங்காட்சியகங்களை அரச அனுமதியோடு உருவாக்க ஆலோசனைகளையும் முன் வைக்கிறார்.
வாசிக்கும் போதே பிரமாண்டத்தை உணர செய்கின்றது இந்நூல்......
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆதாரங்களை தேடி அலைவதிலும், தகவல்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டு இயங்கி வரும் வைத்திய கலாநிதி திரு. Thangarasa Jeevaraj அவர்களை வாழ்த்தி தொடர்ந்தும் இது போன்ற வரலாற்று நூல்கள் எமது தலைமுறைகள் அறியவும் , தேடல் தொடரவும் ஆசிக்கின்றோம்.
இது போன்ற பெறுமதியான பொத்தகங்கள் அடையாளங்களாக வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
திருக்கோணமலை மண்ணின் வரலாற்றை அறிய விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக