அவர் இருதலைக்கொள்ளி எறும்பாகித் தவித்தார். வாழும்போது மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் அவர் காணவில்லை. கணவனினின் குணாம்சங்களைப் புரிந்து அதற்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்தி இருந்தாள் மனைவி அன்புமலர.; அழகும் அன்பும் கொண்ட மாது அவள். அவருக்குக் கிடைத்த பொக்கிஷம். ஆளுக்காள் விட்டுக் கொடுக்காத இனிய தம்பதியினர். அவரின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சியாக ஏற்றுக் கைப்பிடித்தாள். மலரவன் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். நடந்தும், சைக்கிளிலும் பாடசாலைக்குச் சென்று வந்து கொண்டிருந்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
குறைந்த சம்பளம். என்றாலும் சமாளிக்கக் கற்றுக் கொண்டார். அந்தக் கிராமத்தில் அவர்களது சிறிய நிலத்தில் பல்பயிர்த்திட்டத்தைச் செயற்படுத்தினார். சொந்தக் கிராமத்தைச் சொர்க்கமாக்கும் திட்டத்தை வீட்டுத்தோட்டச் செய்கைத் திட்டமாக்கி அதனைப் போட்டியாக செயற்படுத்தினார். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். அன்று மலரவன் பரபரப்பாக இருந்தார். மேற்கொண்டு படிப்பதா, முடியுமா? சமாளிக்;கலாமா? யோசனையில் ஆழ்ந்திருந்தார். இப்படி என்ன யோசனை அவருக்கு? பக்கத்தில் வந்து விசாரித்தாள்.
“;மேல் வகுப்பு மாணவருக்கு கற்பிக்கும் திறனை வளர்த்தெடுக்கும் முயர்ச்சியில் ஈடுபட யோசிக்கிறேன்” என்றார்.
“அதைப்பற்றித்தான் நானும் யோசித்தேன். உங்கட பேருக்குப்பின்னால் ஒரு பி,ஏ பட்டம் கிடைத்தால் எனக்குப் பெருமைதானே”?
அதனை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியே உறைந்து போனார்.
கேட்டதும் அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். “மலர்! உனனைப் பற்றியே என் மனதில் கவலை. நான் படிக்க வெளியூர் சென்றால் எப்படிக் குடும்பத்தைச் சமாளிப்பாய்? அதுதான் கவலை.”
“நீங்க ஏன் அதைப்பற்றியெல்லாம் இப்ப யோசிக்கிறீங்க, முதலில் ஏ. எல் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துங்க” மலர் தொடக்கி வைத்தாள்.
மலரவன் நெகிழ்ந்து போனார். பாடசாலையில் கற்பிப்;பதும், பகல் உணவின்பின் சற்று ஓய்வும், பின்னர் மேலதிகமாகப் பிள்ளைகளுக்குப் படிப்பிப்பதும், முடிந்ததும் மண்வெட்டியுடன் தோட்டத்தில் வேலை செய்வதும் எனக் கஸ்டப்பட்டு உழைத்தார். குளித்து அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மேல்வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களை கற்பிக்க ஆயத்தப் படுத்துவதுமாக சுறுசுறுப்பாக இயங்கினார்.
தோட்டத்தில் கச்சான், சோளன், இடையிடையே மரவெள்ளியையும் பயிரிட்டிருந்தார். மழை தூறத்தொடங்கியதும் நிலத்தைக் கீறி முளைகள் வெளிவரத் தொடங்கின. பார்த்துப் பரவசம் அடைந்தார். மேரிமலர் தனது கணவனின் விடாமுயற்சிக்கு உந்து சகதியாளாள். மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எடுத்தார்கள். மலரவன் அதே பரீட்சையை வேறு ஓரு நிலையத்தில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாகத் தோற்றினார். அவர் பரீட்சை எழுதியது யாருக்கும். தெரியாது. அவருக்கு மனதில் ஒரு அச்சம் இருந்தது. மாணவர்களும் பரீட்சை எடுக்கிறார்கள். தானும் அதே பரீட்சையை எடுப்பதால் தான் சித்தியடையாதுவிட்டால்…..? பரவாயில்லை. மாணவர்கள் சித்தியடைந்தால் அதுதான் வெற்றி. அந்தச் சந்தோசமே போதும். பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மனைவிக்கு மட்டுந்தான் தெரியும். மேரிமலர் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.
விடுமுறை முடிந்து பாடசாலைகள் தொடங்கிவி;ட்டன. பாடசாலைகள் தொடங்கினால் நாடு எங்கிலும் ஒரே கலகலப்புதான். காலையில் வீதிகள் எங்கும் வெள்ளைக் கோலம் போட்டதுபோல் இருக்கும். சூரியக் குஞ்:சுகள் புறப்பட்டது போன்று காட்சியாகியது. அது மக்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாடசாலையில் நாட்கள் விரைந்தன. உயர்தரப் பரீட்சை பெறுபேறு வந்துவிட்டது. அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பாடசாலைக்குரிய பெறுபேறு வந்துவிட்டது.
பிரித்துப் பார்த்ததும் துள்ளிப் பாய்ந்தார். தனது மாணவர்கள் திறமையாகச் சித்தியடைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்தார். அதேபோல் அவர் மனதில் அமைதியற்ற நிலை தோன்றி அவரை வாட்டியது. பாடசாலைகளுக்கே முதலில் பெறுபேறு கிடைக்கும். அந்தப் பாடசாலையில் மலரவனே அதிபராகச் செயற்பட்டார். பயிற்றப்பட்ட பின் ஐந்து வருடச் சேவை முடித்தவர்கள் அதிபருக்கான போட்டிப் பரீட்சை எடுக்கலாம். மலரவன் அப்பரீட்சைக்குத் தன்னை ஆயத்தப்படுத்தி சித்தியடைந்தார். இன்று அப்பாடசாலையின் அதிபராகத் திறமையாக நடத்திச் செல்கிறார்.
வழமைபோல் பாடம் நடத்திக் கொண்டிந்தார். தபால்காரர் கடிதங்களைக் கொடுத்துச் சென்றார். கடிதங்களை ஒரு ஆசிரியர் வாங்கி அதிபரின் மேசைமேல் வைத்து விட்டார். அது இடைவேளைக்கான நேரம். அதிபர் அலுவலக்கத்தினுள் வந்தார். கடிதங்களைத் தரம் பிரித்து அலுவலகக் கடிதங்களை வேறுபடுத்தி உரிய கோவைகளில் திணித்தார். தனக்கு வந்த கடிதத்தை தனிமையில் பிரித்தார். அது தான் எடுத்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுதான். அதனை மனைவி மேரிமலரிடம் சொல்வதற்காக எழுந்து சைக்கிளில் விரைந்தார். வீடு அண்மையிலேயே இருந்தது.
பாடசாலைக்குச் சென்றால் ஏதும் அவசரம் என்றால் மட்டுமே வீடு வருவார். வீட்டில் மேரிமலர் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். எங்கிருந்து வந்தது அவருக்கு அந்தத் தைரியம். அப்படியே மனைவியை அலக்காகத் தூக்கிக் கொண்டாடினார். “மலர் உனது ஊக்கத்தால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன். பல்கலைக்கழகம் கிடைக்கும். நான் படிக்கச் சென்றால் எப்படிக் குடும்பததைக் காப்பாற்றுவாய்”? அவர் கண்கள் குளமாயின.
மேரிமலர் தைரியமானவர் என்பதை மலரவன் உணர்ந்திருந்தார். “என்னங்க நீங்க. இதற்காகத்தானே இவ்வளவு காலமும் காத்திருந்தேன். உங்கட பேருக்குப் பின்னால் பி.ஏ. பட்டம் அடையாளமாக பிரகாசிக்க வேண்டும். அதற்காக நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன். எப்ப பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் வரும்.”?
மனைவியின் பதில் மலரவனைத் திருப்திப் படுத்தினாலும் அவர் உள்ளத்தில் கவலையை ஊன்றிவிட்டது. யாவுமாகி விஸ்வரூபமாய் நிறைந்திருந்தாள். மனைவி வெறும் போகப்பொருள் என்ற கருத்து எங்கோ மறைந்து விட்டது. சைவசித்தாந்தம் இறைவனை அர்த்தநாரீஸ்வரன் என்று கூறும். ஆண் பாதி, பெண்பாதியாக விளங்குவதாக ஐதீகம். அதனை சிவனும், சக்தியும் என அழைப்பார்கள். நமது உடலின் அமைப்பும் அவ்வாறே உள்ளது. வலப்பும் தூய்மையான செவ்விரத்தம் ஓடுகிறது. .இடப்பக்கமாக நீலநிறமாக ஓடுகிறது. இதயம் சுத்திகரிக்கும் இயந்திரமாக இயங்குகிறது. இந்த இதயம் இயங்கும்வரைதானே எல்லா ஆட்டமும்.
மலரவன் மனதில் தத்துவம் உருண்டோடியது. மனைவி கொடுத்த தேநீரைக் குடித்தார். அப்படியே பாடசாலைக்குச் சென்றார். தான் பல்கலைக் கழகம் சென்றால் பாடசாலையை நடத்த அதிபர் வேண்டும். அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். பாடசாலையில் இருந்து பரீட்சை எடுத்தலர்களில் பதினைந்துபேர்களில் பதின்மூன்று பேருக்கு யாழ்ப்பாணப் பலகலைக்கழகம் கிடைத்துவிட்டது. மற்ற இருவருக்கும் கல்வியியல் கல்லுர்ரியில் இடம் கிடைத்து விட்டது. மலரவன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டார. அவருக்குப் பேராதனை பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது.
“நீ என்னவாக ஆகவேண்டும் என்று எண்ணிச் செயல்படுகிறாயோ அப்படியே ஆகுவாய்”. என்று விவேகானந்தர் கூறினார். கொழும்பு கல்வி அமைச்சின் அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் கண்டிக்கு இடமாற்றம் பெற்று பாடசாலை ஒன்றில் கடமையேற்றார். அவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார் என்றே ஊரார். உரிய விண்ணப்படிவத்தை நிரப்பி இரண்டு வருடக்கடமை லீவுக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார். கற்பித்தலை நன்றாகவே செய்தார். நல்ல நண்பர்களையும் பேராசியரியர்களின் அன்பையும் தேடிக்கொண்டார். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் பல்களைக்கழகப் பேராசிரியர்களையும், கல்வியையும் தொடர்ந்தார். அவர்களையும் தனது பாடசாலைக்கு அழைத்து அவர்களைக் கௌரவித்தார். பேராசிரியர்களும், பல்கலைக்கழக மாணவ நண்பர்களையும் பாடசாலைக்கு வந்து கற்பித்தலில் உதவினார்கள். இது ஓருபுதிய அணுகு முறையாகும்.
மலரவன் கற்பித்த பாடசாலை மிகப்பின்தங்கிய பெருந்தோட்டப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை. ஒரு வசதியும் இல்லாத பாடசாலை. ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. இந்த நெருக்கடியான நிலையில் மலரவன் துவண்டு போனார். உயர்கல்வியைத் தொடரும், அதேவேளை பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியிலும் கவனம் செலுத்தினார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் பத்துப் பிள்ளைகள் திறமையாகச் சித்தியடைந்தனர். பெற்றோரும், ஊர்சனங்களும் பாடசாலையில் கூடி அதிபரையும், ஆசிரியர்களையும் பாராட்டினார்கள். விடுமுறை காலம் வந்தது. மலவரனின் பட்டப் படிப்பும் முடிந்து பெறுபேறும் வந்து விட்டது. தான் பி.ஏ.பரீட்சையில் சித்தியடைந்ததை மனைவிக்கு அறிவித்தார். அது நவீன காலம் இல்லை. கடிதம் மூலம் செய்திகளை அனுப்புவார்கள். ஒரு கிழமையின்பின் மனைவியின் கடிதம் கிடைத்தது.
திரு.மலரவன், பி.ஏ. அதிபர், என முகவரி எழுதியிருந்தாள். முதன் முதல் எனது மனைவியே எனக்கு பி.ஏ. பட்டத்தை எழுதி அனுபவித்து அனுப்பியுள்ளாளே. அவள் கண்ட கனவை உண்மையாக்கி விட்டேன். அவர் அழுதேவிட்டார். கடிதத்தில் அவளின் ஆதங்கங்களை கொட்டி எழுதியிருந்தாள்.
பெண் ஒரு போகப் பொருளல்ல. சாதனை படைக்க வந்த சக்தி. அவளுடைய பாராட்டுக்கள் மலரவன் உள்ளத்தை நிரப்பியது. ஒரு பெண் நினைத்தால் சாதனை படைப்பாள். இந்த உலகத்தில் புளோறன்ஸ் நைரிங்கேள், ஹெலன் கெல்லர், அன்னை தெரேசா வரிசையில் எனது மலரையும் சேர்க்கலாம். எனது உயர்வுக்காகத் தன்னை உருக்கி தியாக தீபமாக விளங்குகிறளே! அவரது கண்கள் கசிந்தன.
கேணிப்பித்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக