1/09/2023

நாம் எப்போதும் நல்லவர்களாக வாழமுடியுமா ? - பிரியமதா பயஸ்

இந்த உலகமே இயற்கையின் சூனியத்தினால் ஆனது,அதாவது காரண காரியம் இன்றி இங்கு அணுவும் அசைவதில்லை. எனவே இங்கு ஒவ்வொரு உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது,அதனால் தேவை என்ற ஒன்று எப்பொழுதும் இங்கு இருந்து கொண்டே இருக்கும்.


ஒரு மனிதனாக நான் எவ்வளவு நல்லவன் நான் மிகவும் நல்லவன் என்று கூறிக் கொள்ளலாம் ஆனால் என்னுடைய ஆன்மதேவை(மனம்) அதன்பால் நான் செய்கின்ற என்னுடைய செயலில் மட்டுமே உள்ளது.

ஆனால் எந்த ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு நலம் பயக்க செயலாற்றுகின்றதோ அங்கு அன்பு மலர்கிறது.

இங்கு எதை நலம்,தர்மம் என்று நீங்கள் கூறுவீர்கள் இயற்கையின் படி அனைத்து உயிர்களும்,உங்களுக்கும் எது தேவையோ அதுவே தர்மம் அதுவே இயற்கையின் சமச்சீர் என்று கூறலாம் ஏனென்றால் இயற்கைக்கு பரிமாணம் என்பது மிக அவசியம் எனலாம்,அப்படி எடுத்துக் கொண்டோமேயானால் ஒரு உயிரின் தேவையின் மற்றொரு உயிரிழப்பு நேருகின்றதே அது நலமானதா அங்கு அன்பு எங்கு உள்ளது என்று கேட்டீர்கள் என்றால்எந்த உயிரில் கருணைமலர்கிறதோ அங்கு மட்டுமே அன்பு மலர்கிறது அப்படி மலர்ந்த அன்பு மட்டுமே நிபந்தனையற்ற அன்பாக இருக்கக் கூடும்.

எனவே நிபந்தனை வந்துவிட்டாலே அது தேவையுடன் சேர்ந்துவிடுகிறது, எப்படி இருந்தாலும் தனக்கு தன்னுடைய உயிர் என்று ஒன்று முக்கியம் தானே அது தானே பரிமாணம்,இந்த அடிப்படையில் தான் இயற்கையில் வலியது பிழைக்கும் நிலைமை உருவாகிவிட்டது.

ஆனால் மான்கள் பசுக்கள் இவை அனைத்தும் வலிமையற்று பிறந்தது அதன் தவறா
எனவேதான் இந்த உலகில் மனிதனுக்கு ஆறவது அறிவாக சிந்தனை(பகுதாய்தல்) என்று ஒன்று உள்ளதால் ஜீவராசிகள் மனிதனை விட வலிமை குறைவானதாக இருக்கின்றது, தெரிகின்றது.

சுலபமாகச் சொன்னால் அனைத்து உயிர்களை விட மனித உயிர் மென்மையானதாக  திகழ்கின்றது எனலாம்
ஏனென்றால் மனித உயிருக்கு சிந்தனை உள்ளது அதை தான் நாம் ஆன்மவிகுதி எனக் கூறுகின்றோம்.

இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் மற்ற உயிர்களான விலங்குகள் பறவைகள் என்று அனைத்திற்கும் ஒரு பண்பு,குணம் தனக்கென தன்னகத்தில் வகுக்க பட்டுள்ளது.

அது இயற்கையினாலே  அந்த உயிரின் மரபணுவில் தோற்றுவிக்கப்பட்ட உயிர்தப்பி வாழ்தலின் அடிப்படை செயல்களாக கருதலாம்.

ஆனால் மனிதனுக்கு சிந்தனை என்ற ஒன்று உள்ளதனால் அதன் மூலம் அவரின் மனதில் திருப்தி என்ற ஒன்று நிலவுவது இல்லை மேலும் மேலும் பல ஆசைகள் மட்டுமே உருவாகின்றது எனவே தான் ஒரு மனிதரின் குணத்தை உங்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை ஆதலால் தான் மனம் குரங்கு போன்றது என கூறுகிறார்கள் என்றால் மிகை ஆகாது.

ஒரு மனிதனின் குணம் இதுதான் என்று உங்களால் முழுமையாக கூற முடியுமா? முடியாது தானே
ஒரு மனிதன் பிறப்பில் நல்லவனாக இருக்கலாம், காலத்தில் அவன் தீயவனாக மாறலாம் இறுதியில் இறப்பின் போது மீண்டும் நல்லவனாக மாறலாம், எனவே அனைத்துமே காலத்தின் தேவையின் கையில் உள்ளது
எனவேதான் மற்ற ஜீவராசிகளுக்கு மனம் என்று ஒன்று இல்லாத தனால் ஆசைகள் எதுவும் உருவாவதில்லை
மற்றொரு விதமாக கூறினால் மன மான ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு காலபயணத்தில் ஒவ்வொரு பரிமாணத்திலும் இருக்கின்றது.

எனவே ஒரு ஆன்மாவின் தேவையை இங்கு எக்காரணத்தாலும் எப்போது எதிலும் வாழ்நாள் முழுவதுமாக தனக்குத்தானே சுகம் அடைந்து கொண்டாலும் கூட மனமதை திருப்தி அடைய செய்ய முடிவதில்லை.

இங்கு ஒரு பொருள் ஒரு செயல் அதாவது ஒரே பொருள் ஒரே செயல் ஒவ்வொருவருடைய கண்களுக்கும் மாறுபடும்.

இதை எளிதாகச் சொன்னால்  சிங்கங்கள் ஒரே இனம் ஒரே குணம், பசுக்கள் ஒரே இனம் ஒரே குணம் ஆனால் மனிதன் என்ற ஒரே இனம் வெவ்வேறு ஆன்மாக்களால் ஆனது. எனவே இது அவரவர்களின் ஆன்மா தேக்கத்தின்படி அவரவர்க்கு அவருனுடைய சுக துக்கங்கள் மாறுகின்றது. எனவே ஒருவர் எதுவாக இருக்க முயன்றாலும் அவருக்கு அதற்கான செயல் செய்வதில் சுகம் ஏற்பட்டால் மட்டுமே அந்த செயல் அவர்களுடைய ஆத்ம சாந்தி பெறும்.

ஆகவே  பிறப்பின் குணத்தில்  ஒருவர் நல்லவராக இருந்து அவர் மற்றவரின் நலனை விரும்பும் பொழுது,அன்பு செலுத்தும் பொழுதும் அவருக்கு வேண்டுமானால் எப்பொழுதும் அதில் இன்பம் பயக்கலாம் ஆனால் மற்றவரின் தேவை மற்றும் அவரவர்க்கு ஏற்றார் போல் மாறுபடும் எனவே தான் கணவன் மனைவி ஆனாலும் பிரிவினை உண்டாகிறது எனலாம்.

ஆதலால் நீங்கள் நல்லவராக இருந்து அன்பு செலுத்துவதால் ஐந்தறிவு ஜீவராசிகள் உங்களிடம் வசப்படலாம் ஆனால் ஆறறிவு மனிதரை திருப்திப்படுத்த முடிவதில்லை.

எனவேதான் மனிதர்களின் இடையில் ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது கடினமாகிறது ஆனால் ஆத்மசாந்தி மூலம் ஒரு சில மனங்கள் நல்லது மட்டுமே நினைக்கின்றது இது பிறவிகளின் மோட்ச நிலை எனலாம் பொதுப்படையாக இதனை வலுப்படுத்தவே ஆன்மீகம்,சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறை ,மனிதநேயம் என்று பல பண்புகள் கடைபிடிக்க முன்னோர்கள் வழிவகை செய்துள்ளார்கள்.

எனவே மனிதருள் மட்டும்தான் நல்லவன் தீயவன் மற்றும் பல பிரிவினைகள் கொண்டு பார்க்கப்படுகிறது ஆனால் இயற்கைக்கு இது அனைத்துமே சமநிலை எனலாம் அதுவே யோக நிலை எனலாம்.

 இங்கு ஒரு மனிதரின் மேன்மை என்று கருதப்படும் ஐம்புலன்கள் மூலம் எழுகின்ற எண்ணங்களை தனது ஆன்ம தேக்கங்களான மனம் என்ற ஒன்றின் மூலம் விருப்பு-வெறுப்பு என்ற பதிவுகள் கொண்டு தனக்குத் தேவையானதை பிரித்தெடுக்கும் சிந்தையினால் ஆன்மசுகம், ஆன்மசாந்தி அடைவதற்காக உங்களின் எழுகின்ற ஆசைகளையும் நீங்களாக செய்கின்ற செயல்களையும் யார் தடுத்தாலும் மாற்றம் பெற செய்யவோ அல்லது நடப்பதை நிற்க வைக்க போவது என்பது முடிவது இல்லை.

எனவே ஒரு அணு அசைவிலே அதன் பொருள் தீர்மானமாககிவிடுகின்றது எனவே உங்களின் பிறப்பிலே உங்களின் வாழ்க்கை பரிணமிக்கப்பட்டு விட்டது,உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்ற நடந்துமுடிந்த நடக்கப்போகின்ற அனைத்துமே உங்கள் பிறப்பின் முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நிதர்சனமான உண்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே முடிந்த அளவில் உங்களில் செயலில் நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் ,அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், எப்பொழுதும் அமைதி மற்றும் சந்தோஷத்தை அதாவது ஆனந்தத்தை உங்களில் பெருக்கிக் கொண்டே இருங்கள், (நீங்கள் நீங்களாக இருப்பதனால் உங்களுக்குள் சந்தோஷம் நிலவும்,நீங்கள் நீங்களாக இருக்க முதலில் உங்களை புரிந்து கொள்ளுங்கள் நான் யார் என்ற கேள்வியுடன்)
உங்களின் மேல் அன்பால் பிணைக்கப்பட்டவரின் தேவைகளை அறிந்து உங்களின் கடமைகளை சரியாக செய்து வாருங்கள் அனைத்தும் நன்றாகவே நடக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...