3/13/2023

புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா




 

ஊர்துஜா ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி, மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி இபின் பதூதாவின் பயணக் குறிப்புகளில் (1304 - கி.பி 1368) பதிவு செய்யபட்டிருக்கிறாள் . இந்த இளவரசியின் வசிப்பிடம் தாவலிசி மற்றும் காய்லுகாரி என்ற இடங்கள் சர்ச்சைக்குரியதாக இருப்பினும், பிலிப்பைன்ஸில் பன்காசினன் என்ற பகுதியிலிருந்து வந்தவள் என்று பரவலாக நம்பப்படுகிறது. இவள் பிலிப்பைன்ஸின் தேசிய கதாநாயகியாகக் கருதப்படுகிறாள் .

இப்னு பதூதா:

இவர் தனது பயணக்குறிப்புகளில் ஊர்துஜாவை தாவாலிசி நிலப்பரப்பின் காய்லுகாரியின் ஆட்சியாளராகக் குறிப்பிடுகிறார். இப்னு பதூதா சமுத்ர பாசை சுல்தானிய ஆட்சிப் பரப்பை அடைந்த பிறகு, (இப்போதுள்ள சுமத்ரா, இந்தோனேஷியா) சீனாவிற்குச் செல்லும் தனது வழியில் இளவரசி ஊர்துஜாவை சந்தித்ததுள்ளார். இப்னு பதூதாவின் கூற்றுப்படி, பல கப்பல்களைக் கொண்டிருக்குகிறாள் மற்றும் சீனாவின் போட்டியாளராக இருந்தால்.

ஊர்துஜாவை ஒரு போர்வீராங்கனையாகவும் மற்றும் இளவரசியாகவும் இப்னு பதூதா வர்ணித்தார், ஊர்துஜாவின் இராணுவம் ஆண்களையும் பெண்களையும் கொண்டது. ஊர்துஜா ஒரு பெண் வீராங்கனை. அவள் தனிப்பட்ட முறையிலும், பிற வீரர்களுடன் இணைந்து இரட்டை வீரர்களாகவும் சண்டையில் பங்கேற்றால். சண்டையில் தன்னைத் தோற்கடித்தவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவள் மேற்கோள் காட்டினார். மற்ற வீரர்கள் அவமானப்படுவார்கள் என்ற பயத்தில் அவளுடன் போராடுவதைத் தவிர்த்தனர்.

ஊர்துஜா தனது இராணுவத் திறத்தாலும் "மிளகு நாடு" என்று அழைக்கப்படும் இந்தியாவுக்கு ஒரு பயணத்தை வழிநடத்துவதற்கான அவளது இலட்சியத்தினாலும் இப்னு பதூதாவைக் கவர்ந்ததால். இப்னு பதூதா மற்றும் அவரது கப்பலில் பயணம் செய்த குழுவினருக்கு விருந்து தயாரிப்பதன் மூலம் அவர் தனது விருந்தோம்பலைக் காட்டில்னால். மேலும் அவருக்கு தாராளமாகப் பரிசுகளை வழங்கினால். அதில் அங்கிகள், அரிசி , இரண்டு எருமைகள் , மற்றும் நான்கு பெரிய ஜாடிகளில் உப்பு சேர்க்கப்பட்ட இஞ்சி,மிளகு ,எலுமிச்சை, மற்றும் மாம்பழங்கள்.

தோற்றம்

ஊர்துஜா பெரும்பாலும் தங்கமயமான வெண்கல நிறத்தை உடையவளாகவும், நேரான, பளபளப்பான, நறுமணமுள்ள, அடர் கருமையான முடி மற்றும் ஆழமான, அடர் நிறக் கண்கள் கொண்ட உயரமான மற்றும் அழகான பெண்மணி என்று வர்ணிக்கப்படுகிறார். தங்கத்தில் உறைந்தவர் மற்றும் வாள் சண்டை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் திறமையானவர் எனவும் இபின் அவளை குறிப்பிடப்படுகிறார். பெண் வீராங்கனைகளின் தலைவர் ஆவார். அவள் ஒரு தைரியமான, புத்திசாலி மற்றும் கனிவான பெண்மணி. காலனித்துவத்திற்கு முந்தைய தென்கிழக்கு ஆசியாவில் பிரபுக்களின் பொதுவான பண்பாக இருந்த பல மொழி பேசும் திறமையாளராகவும் அவள் நம்பப்படுகிறார்.

ஆராய்ச்சி

தாவாலிசி என்ற இடம் எங்கிருந்தது என்பது தொடர்பான யூகமானது ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டது. யூகத்தின் அடிப்படையிலான அந்த இடங்கள் பன்காசினன், லுசான், சூலு, சுலவேசி, ஜாவா, கம்போடியா, சீனாவில் உள்ள கொச்சின், சீன முதன்மை நிலப்பகுதியில் குவாங்டாங் மாகாணம், தெற்காசியாவில் "டா" வில் தொடங்கும் ஒவ்வொரு தீவும் என்பவை ஆகும்.

பிலிப்பைன்ஸ் கோட்பாடு

தவாலிசியில் இருந்து சீனாவிற்கு இப்னு பதூதா பயணம் செய்ய எடுத்துக் கொண்ட பயண நேரம் மற்றும் தூரத்தை அவர் கணக்கிட்டதன் அடிப்படையில் தவாலிசியின் நிலம் பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் இருப்பதாக ஊகிக்கின்றனர்.

 

மொங்கொலியா தன்னுடைய ஏகக்கட்சி ஜனநாயகத்தைக் கைவிட்டு முப்பது ஆண்டுகளாகிறது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகளாகியும் நாட்டின் ஒரே ஹீரோவான ஜெங்கிஸ்கானை அம் மக்கள் கைவிடத் தயாராகவில்லை. உலகம் இதுவரை கண்ட மிகப்பெரிய வெற்றிப் படையெடுப்பாளனோ, ஆக்கிரமிப்பாளனோ நீங்கள் அவனை எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி. அவன் தான் இன்றும் அந்த நாட்டையும் அம்மக்களின் மனத்தையும் ஆள்கிறான்.

2/28/2023

 "வின்னி மண்டேலாவின் வாக்குமூலம்"

                மகுடம் பதிப்பக வெளியீடு 

நூலாசிரியர்  

                       மு.தயாளன்

வின்னி மண்டேலா 

தென்னாபிரிக்கா நாட்டின் விடுதலை வீரன் நெல்சன் மண்டேலாவின் துணைவியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு 

சுயசரிதம் போன்ற அமைப்பில்  இந்நூல் நகர்கின்றது. நெல்சன் மண்டேலா  கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், வெள்ளையர் அரசு வின்னி மண்டேலாவை படாதபாடு படுத்த ஆரம்பித்தது. 36 வயதுக்குள் பல முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒரு முறை 491 நாள் சிறையில் அடைபட்டார். 

அனுபவித்த சிறைவாசம் பற்றி இப்படி எழுதுகிறார்... ‘‘இந்த தண்டனையின்போது என் அறை மிகவும் சிறியது. கை கால்களை நீட்டினால் பக்கவாட்டு, மேற்சுவர்கள்  இடிக்கும். யாரையும் சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். இது உயிருடன் என்னை கொல்வதற்கு சமம்! மூச்சு  விட்டதால் நான் உயிருடன் இருந்தேன். ஆனால் என் மதிப்பு, மரியாதையெல்லாம் போனது. எனக்கு தெரியாத வலியே

இல்லை. அந்த அளவுக்கு என்னை வெள்ளையர் அரசு பாடாய் படுத்தியது."

 இது மட்டுமா? 13 வருடங்கள் பிரன்ட்போர்ட் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்த வீட்டில் தண்ணீர்,  மின்சாரம் கிடையாது. வெள்ளையர் அரசுக்கு பயந்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வர மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.  ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப குத்தினால் என்ன ஆகும்? குந்திய இடம் மரத்துப் போகும்! நரம்புகளும் கூட, மரித்துப்  போகும்!’’அது மட்டுமல்ல 14 வயது இளைஞன் ஒருவன் கொலைக்கும், மற்றொரு நபர் கொலைக்கும், வின்னி  மண்டேலாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டார்.

      வின்னி மண்டேலா வெள்ளையர்களுக்கே பயத்தின் அடையாளமாக திகழ்ந்த பெண்மணி, உண்மையில் ஆண்டாண்டு காலங்களாக அழுத்தப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலைக்கு மட்டுமன்று, ஒடுக்கப்படும் பெண்களுக்கும் அரசியலில் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். துணிவாக வின்னி மண்டேலா வெள்ளையர்களின் போக்கிலே சென்று வெற்றியை தனதாக்கியவர்.அடிமைகளாக தங்களை தாங்களே தாழ்த்தியது போதும் என்று அவருக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடையை கண்டுப்பிடித்து செயலில் காட்டியவர்.வெள்ளையர்கள் வீதியில் செல்லும் போது கறுப்பர்களை கண்டால் விலகி நடக்கும் அளவிற்கு மாற்றத்திற்கு வித்திட்டவர்.

       சமூக விடயங்களில் அக்கறை காட்டாமல் இருந்த வெள்ளையர்கள் வின்னி மண்டேலாவின் செய்கைகளால் கலங்கி போனார்கள்.இது கறுப்பர்கள் மத்தியில் ஒரு வித மன உறுதியை அடையச் செய்தது. கறுப்பின மக்களை உழுவு இயந்திரத்தை இயக்குவதற்காக குறைந்த வேதனத்தில் அடிமைகளாக நடத்தப்பட்டனர் வின்னி மண்டேலாவின் கைகளில் விலங்கிடப்பட்டப் போது அங்கே தான் கறுப்பின மக்களின் விடுதலைக்கான விதை விதைக்கப்பட்டது. வெள்ளையர் அதிகமாக வாழ்ந்த பகுதியில் வின்னி மண்டேலா அழைத்து வரப்பட்ட போது மாற்றம் நிகழத்தொடங்கிற்று. வெள்ளையர்கள் எங்கு அதிகமாக கூடி இருந்தார்களோ அங்க அவளும் இருப்பாள். பசியால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து பசி போக்கும் பணியில்....... ஈடுப்பட்டாள்ஆனால் அதுவும் போதியளவு வசதியினை ஏற்படுத்தக்கூடியதாகஅமையவில்லை.என்பதே கவலையே!வைத்தியசாலை இருந்தும்  மருத்துவர்களோ, மருந்துகளோ இல்லாமையால் கறுப்பின மக்கள் துன்பங்களிலே தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களாய் காணப்பட்டார்கள். வின்னி மண்டேலா ஒரு சம்பவத்தை இங்கே சொல்கின்றார் அவரால் தத்தெடுக்கப்பட்ட பெண் கர்ப்பமாய் இருந்த நேரத்தில் குழந்தையின் தலை திசை மாறி இருந்ததால் போதிய வைத்திய உதவியின்மையால் மரணத்தை தழுவியதாக குறிப்பிடுகின்றார். இந்நிகழ்வு அவர் மனதை குத்தி கிழித்தது. நிறவாதத்தின் கொடுமைகள் ஏற்றுக்கொள்ளவே முடியாவளாய் அவளுள் அடக்க முடியாத சுவாலை எரிய ஆரம்பித்திருந்தது. 

வைத்தியசாலைகள் இருந்தும் கறுப்பர்களுக்கு சிகிச்சை என்பது மிக மிகக் கடினமாகவே இருந்தது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மனிதாபிமான திட்டமாக உணவு சூப் வழங்க ஏற்பாடு வின்னி மண்டேலாவின் தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 

கறுப்பின மக்களின் சுகாதார விடயங்களில் அக்கறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. தங்களுக்குத் தேவையான உணவுகளை வீட்டு தோட்டத்தினூடாக பெற்றுக்கொள்ள  முடியுமாயிருந்தது. 

ஆனால் அடுத்த பிரச்சினையாக நீரினை பெறுவது.துன்பங்கள் தொடர்கதையானது. உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.கடைசி ஆயுதமாக வின்னி மண்டேலா பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.பெண்களை கிளர்தெழுச் செய்தார்.போராட்டமே அவர் வாழ்க்கையானது.அபூர்வ பெண்மணியாக கறுப்பு தேசத்தின் அசைக்க முடியாத வீர மங்கையானாள்.அறவழி போராட்டம் ஆயுத போராட்டமாகியது. தன் கணவரின் மீதான காதல் பற்றிய அவரின் குறிப்பில்....... அருகருகே இருந்தும் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நெல்சன் மீது கொண்ட காதல் அவருள் புதியதொரு சக்தி பரவுவதாகவும்,

இந்த சக்தியே அவரை உற்சாகமாக செயற்பட வைத்ததாகவும் குறிப்பிடுகின்றார். அவர்களின் வாழ்க்கை அழகாக மகிழ்ச்சியாக நகர்ந்த போதே வெள்ளையர்களால் சிறைக்கு செல்ல நேரிட்டது.

பேசப்படாத பல பாேராட்ட உண்மைகள் அவளுள் புதையுண்டு போனது.திருமண வாழ்வில் விரிசல்.......... 1990-ல் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வந்ததும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். 1992ல் பிரிந்து, 1996ல்  விவாகரத்து பெற்றனர். 1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் வின்னி.இறக்கும்  வரைகூட  நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தொடர்ந்தார். 1994-96ம் ஆண்டுகளுக்கு இடையே கருப்பர் ஆட்சியில், இணை அமைச்சராக இருந்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில்  பதவிநீக்கம் செய்யப்பட்டார். 

இதனிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெண்கள் அணிக்கு தலைவியாக இருந்தார். நெல்சன் மண்டேலாவின்  இறுதி காலத்தில் சிறிது காலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட பெண்மணியாக வாழ்ந்த வின்னிமண்டேலா  நிச்சயம் ஒரு வித்தியாசமான பெண்மணி தான்!



இன்றும் தென்னாபிரிக்காவின் தேசிய அன்னை என மதிக்கப்படுகின்றார்.

   

திருகோணமலை றொசில்டா அன்டோ      

 இப்பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் 

எத்துணை பெரிய 

அதிசயத்தையும் நிகழ்த்தலாம் ....


வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு...

பயணங்கள் வேறு...

சிலரின் பயணத்தில் 

வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்...

வலிகள் இன்றி அவர்கள் 

பயணம் செய்யலாம்....

ஒரு சிலருக்கோ 

பயணத்தில் வழிகளை 

உருவாக்க வேண்டி வரலாம்...

வலிகள் நிறைந்த 

பயணமாக கூட அது இருக்கலாம்...

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.... 

உங்கள் வலிகளுக்கான 

பல மடங்கு பலன்கள் 

நிச்சயம் கிடைக்கும்...


வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இயற்கை 

ஒரு புது வழியையே உருவாக்கலாம்....

உங்களுக்கான பாதைகள் 

உங்களை வாழ்வில் மிகச் 

சிறந்த நிலைக்கு 

கொண்டுச் செல்லலாம்...

ஆகவே.....

பாதைகள் எப்படி இருந்தாலும் உங்களை நம்பி பயணத்தை தொடருங்கள்....

உங்கள் பயணம் 

நிச்சயமாக சிறப்பாக இருக்கும்....

இன்று நீங்கள் 

படும் கஷ்டங்களை வைத்து 

நாளை உங்கள் வாழ்க்கையை 

நிர்ணயித்து விடாதீர்கள்....

நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.

நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருப்போம்... 

நிச்சயம் நல்லதே நடக்கும்...

SsShafeena ❣️

1/09/2023

நாம் எப்போதும் நல்லவர்களாக வாழமுடியுமா ? - பிரியமதா பயஸ்

இந்த உலகமே இயற்கையின் சூனியத்தினால் ஆனது,அதாவது காரண காரியம் இன்றி இங்கு அணுவும் அசைவதில்லை. எனவே இங்கு ஒவ்வொரு உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது,அதனால் தேவை என்ற ஒன்று எப்பொழுதும் இங்கு இருந்து கொண்டே இருக்கும்.


ஒரு மனிதனாக நான் எவ்வளவு நல்லவன் நான் மிகவும் நல்லவன் என்று கூறிக் கொள்ளலாம் ஆனால் என்னுடைய ஆன்மதேவை(மனம்) அதன்பால் நான் செய்கின்ற என்னுடைய செயலில் மட்டுமே உள்ளது.

ஆனால் எந்த ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு நலம் பயக்க செயலாற்றுகின்றதோ அங்கு அன்பு மலர்கிறது.

இங்கு எதை நலம்,தர்மம் என்று நீங்கள் கூறுவீர்கள் இயற்கையின் படி அனைத்து உயிர்களும்,உங்களுக்கும் எது தேவையோ அதுவே தர்மம் அதுவே இயற்கையின் சமச்சீர் என்று கூறலாம் ஏனென்றால் இயற்கைக்கு பரிமாணம் என்பது மிக அவசியம் எனலாம்,அப்படி எடுத்துக் கொண்டோமேயானால் ஒரு உயிரின் தேவையின் மற்றொரு உயிரிழப்பு நேருகின்றதே அது நலமானதா அங்கு அன்பு எங்கு உள்ளது என்று கேட்டீர்கள் என்றால்எந்த உயிரில் கருணைமலர்கிறதோ அங்கு மட்டுமே அன்பு மலர்கிறது அப்படி மலர்ந்த அன்பு மட்டுமே நிபந்தனையற்ற அன்பாக இருக்கக் கூடும்.

எனவே நிபந்தனை வந்துவிட்டாலே அது தேவையுடன் சேர்ந்துவிடுகிறது, எப்படி இருந்தாலும் தனக்கு தன்னுடைய உயிர் என்று ஒன்று முக்கியம் தானே அது தானே பரிமாணம்,இந்த அடிப்படையில் தான் இயற்கையில் வலியது பிழைக்கும் நிலைமை உருவாகிவிட்டது.

ஆனால் மான்கள் பசுக்கள் இவை அனைத்தும் வலிமையற்று பிறந்தது அதன் தவறா
எனவேதான் இந்த உலகில் மனிதனுக்கு ஆறவது அறிவாக சிந்தனை(பகுதாய்தல்) என்று ஒன்று உள்ளதால் ஜீவராசிகள் மனிதனை விட வலிமை குறைவானதாக இருக்கின்றது, தெரிகின்றது.

சுலபமாகச் சொன்னால் அனைத்து உயிர்களை விட மனித உயிர் மென்மையானதாக  திகழ்கின்றது எனலாம்
ஏனென்றால் மனித உயிருக்கு சிந்தனை உள்ளது அதை தான் நாம் ஆன்மவிகுதி எனக் கூறுகின்றோம்.

இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் மற்ற உயிர்களான விலங்குகள் பறவைகள் என்று அனைத்திற்கும் ஒரு பண்பு,குணம் தனக்கென தன்னகத்தில் வகுக்க பட்டுள்ளது.

அது இயற்கையினாலே  அந்த உயிரின் மரபணுவில் தோற்றுவிக்கப்பட்ட உயிர்தப்பி வாழ்தலின் அடிப்படை செயல்களாக கருதலாம்.

ஆனால் மனிதனுக்கு சிந்தனை என்ற ஒன்று உள்ளதனால் அதன் மூலம் அவரின் மனதில் திருப்தி என்ற ஒன்று நிலவுவது இல்லை மேலும் மேலும் பல ஆசைகள் மட்டுமே உருவாகின்றது எனவே தான் ஒரு மனிதரின் குணத்தை உங்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை ஆதலால் தான் மனம் குரங்கு போன்றது என கூறுகிறார்கள் என்றால் மிகை ஆகாது.

ஒரு மனிதனின் குணம் இதுதான் என்று உங்களால் முழுமையாக கூற முடியுமா? முடியாது தானே
ஒரு மனிதன் பிறப்பில் நல்லவனாக இருக்கலாம், காலத்தில் அவன் தீயவனாக மாறலாம் இறுதியில் இறப்பின் போது மீண்டும் நல்லவனாக மாறலாம், எனவே அனைத்துமே காலத்தின் தேவையின் கையில் உள்ளது
எனவேதான் மற்ற ஜீவராசிகளுக்கு மனம் என்று ஒன்று இல்லாத தனால் ஆசைகள் எதுவும் உருவாவதில்லை
மற்றொரு விதமாக கூறினால் மன மான ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு காலபயணத்தில் ஒவ்வொரு பரிமாணத்திலும் இருக்கின்றது.

எனவே ஒரு ஆன்மாவின் தேவையை இங்கு எக்காரணத்தாலும் எப்போது எதிலும் வாழ்நாள் முழுவதுமாக தனக்குத்தானே சுகம் அடைந்து கொண்டாலும் கூட மனமதை திருப்தி அடைய செய்ய முடிவதில்லை.

இங்கு ஒரு பொருள் ஒரு செயல் அதாவது ஒரே பொருள் ஒரே செயல் ஒவ்வொருவருடைய கண்களுக்கும் மாறுபடும்.

இதை எளிதாகச் சொன்னால்  சிங்கங்கள் ஒரே இனம் ஒரே குணம், பசுக்கள் ஒரே இனம் ஒரே குணம் ஆனால் மனிதன் என்ற ஒரே இனம் வெவ்வேறு ஆன்மாக்களால் ஆனது. எனவே இது அவரவர்களின் ஆன்மா தேக்கத்தின்படி அவரவர்க்கு அவருனுடைய சுக துக்கங்கள் மாறுகின்றது. எனவே ஒருவர் எதுவாக இருக்க முயன்றாலும் அவருக்கு அதற்கான செயல் செய்வதில் சுகம் ஏற்பட்டால் மட்டுமே அந்த செயல் அவர்களுடைய ஆத்ம சாந்தி பெறும்.

ஆகவே  பிறப்பின் குணத்தில்  ஒருவர் நல்லவராக இருந்து அவர் மற்றவரின் நலனை விரும்பும் பொழுது,அன்பு செலுத்தும் பொழுதும் அவருக்கு வேண்டுமானால் எப்பொழுதும் அதில் இன்பம் பயக்கலாம் ஆனால் மற்றவரின் தேவை மற்றும் அவரவர்க்கு ஏற்றார் போல் மாறுபடும் எனவே தான் கணவன் மனைவி ஆனாலும் பிரிவினை உண்டாகிறது எனலாம்.

ஆதலால் நீங்கள் நல்லவராக இருந்து அன்பு செலுத்துவதால் ஐந்தறிவு ஜீவராசிகள் உங்களிடம் வசப்படலாம் ஆனால் ஆறறிவு மனிதரை திருப்திப்படுத்த முடிவதில்லை.

எனவேதான் மனிதர்களின் இடையில் ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது கடினமாகிறது ஆனால் ஆத்மசாந்தி மூலம் ஒரு சில மனங்கள் நல்லது மட்டுமே நினைக்கின்றது இது பிறவிகளின் மோட்ச நிலை எனலாம் பொதுப்படையாக இதனை வலுப்படுத்தவே ஆன்மீகம்,சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறை ,மனிதநேயம் என்று பல பண்புகள் கடைபிடிக்க முன்னோர்கள் வழிவகை செய்துள்ளார்கள்.

எனவே மனிதருள் மட்டும்தான் நல்லவன் தீயவன் மற்றும் பல பிரிவினைகள் கொண்டு பார்க்கப்படுகிறது ஆனால் இயற்கைக்கு இது அனைத்துமே சமநிலை எனலாம் அதுவே யோக நிலை எனலாம்.

 இங்கு ஒரு மனிதரின் மேன்மை என்று கருதப்படும் ஐம்புலன்கள் மூலம் எழுகின்ற எண்ணங்களை தனது ஆன்ம தேக்கங்களான மனம் என்ற ஒன்றின் மூலம் விருப்பு-வெறுப்பு என்ற பதிவுகள் கொண்டு தனக்குத் தேவையானதை பிரித்தெடுக்கும் சிந்தையினால் ஆன்மசுகம், ஆன்மசாந்தி அடைவதற்காக உங்களின் எழுகின்ற ஆசைகளையும் நீங்களாக செய்கின்ற செயல்களையும் யார் தடுத்தாலும் மாற்றம் பெற செய்யவோ அல்லது நடப்பதை நிற்க வைக்க போவது என்பது முடிவது இல்லை.

எனவே ஒரு அணு அசைவிலே அதன் பொருள் தீர்மானமாககிவிடுகின்றது எனவே உங்களின் பிறப்பிலே உங்களின் வாழ்க்கை பரிணமிக்கப்பட்டு விட்டது,உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்ற நடந்துமுடிந்த நடக்கப்போகின்ற அனைத்துமே உங்கள் பிறப்பின் முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நிதர்சனமான உண்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே முடிந்த அளவில் உங்களில் செயலில் நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் ,அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், எப்பொழுதும் அமைதி மற்றும் சந்தோஷத்தை அதாவது ஆனந்தத்தை உங்களில் பெருக்கிக் கொண்டே இருங்கள், (நீங்கள் நீங்களாக இருப்பதனால் உங்களுக்குள் சந்தோஷம் நிலவும்,நீங்கள் நீங்களாக இருக்க முதலில் உங்களை புரிந்து கொள்ளுங்கள் நான் யார் என்ற கேள்வியுடன்)
உங்களின் மேல் அன்பால் பிணைக்கப்பட்டவரின் தேவைகளை அறிந்து உங்களின் கடமைகளை சரியாக செய்து வாருங்கள் அனைத்தும் நன்றாகவே நடக்கும் .

1/08/2023

*கிறுக்கலான கன்னிமை* சிறுகதை - பிரம்மியா சண்முகராஜா

 


வானம் பாடிக் கூட்டங்கள் போல் வாழ்ந்து அனுபவிக்கும் சிட்டுகளிடம் ஓர் சின்ன பரிசோதனைக்காய் ஆயத்தமானாள் அர்த்தனா.கிராமத்து பாடசாலையில் 2 மணிநேரம் அவளும் சிறுமியாய் உணர்வு கலக்கும் தருணம் அது. விளையாட்டுக்களும் வினா விடைகளும் குழுக்களாய் தனியாய் மகிழும் தருணமானது அந்த கணங்கள்.

     சூரியனும் நிலவும் ஒரே வானில் தானே சூரியக்கதிர்கள் ஏன் சுடுகின்றது? நிலவு துகள்கள் ஏன் குளிர்கின்றது? என அறியாதவள் சுடும் என்ற பின்னும் தொட்டுப் பார்த்து அனுபவம் காணத் துடிக்கும் விட்டிலாய் அசைவெல்லாம் ஆரோகணம் உச்சம் காட்டிக்கொண்டு அனைத்துக்கும் கையை உயர்த்தி தன்னை பிரதிபலித்துக் கொண்டு இருந்தாள். கீர்த்தி. வயது 12 தான் 16 வயது மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு போட்டியாய் முன் அணியில் மின்னிக் கொண்டு இருந்தாள். ஆனாலும் இமைத்து மூடும் விழிகளில் அவள் துடிப்பு தாண்டிய துறவறம் சிரிப்பில் விரித்துச் சுருக்கும் இதழில் மின் துண்டிப்பு நாடகம்.

     அர்த்தனா அறுபது மாணவர்கள் மத்தியில் குழந்தையாய், ஆசானாய், தாயாய், சகோதரியாய், வித்தைகாரியாய் கற்பித்துக் கொண்டே அவர்களில் ஒவ்வொருவரையும் கற்றுக் கொண்டு இருந்தாள். அவள் அமைதியை வசனமிட்டு வாசிப்பவள் கண்களின் மொழி புரிதல் கைவந்த கலை அவளுக்கு. கீர்த்தியின் மின்வெட்டு புன்னகையை விரித்துத் தெளிந்து வாசித்தாள். அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு அர்த்தனாவுக்கு ......... கருத்தரங்கின் அந்தி நேரம் நெருங்கியது நன்றியுடன் விடை பெற அனைவரையும் ஒன்று சேர்த்தாள் அர்த்தனா. பிள்ளைகளில் சிலர் மிஸ் மிஸ் என்றும் சிலர் டீச்சர் என்றும் பலர் அக்கா என்றும் அவள் ஓரமாய் கூடி நெருங்கி கருத்தரங்கையும் அவளையும் கருத்தாக்கிக் கொண்டனர். அர்ச்சனாவின் சேலை நுனியை பிடித்தபடி உங்க புடவை ரொம்ப அழகா இருக்கு! நான் உங்களை எப்படி கூப்பிடலாம் என்று நெருக்கினாள் கீர்த்தி. அர்த்தனாவின் ஐயம் உறுதியானது. நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள் என் பெயர் அர்த்தனா உங்களுக்கு விருப்பம் என்றால் அப்படியும் கூப்பிடலாம் என்று கீர்த்தியின் எண்ணத்தில் உரிமை எடுத்துக் கொள்ள எத்தணித்தாள்.

     பாடசாலை நிறைவு மணி காற்றோடு காதுகளை வந்தடைந்தது அர்ச்சனாவின் கவனமெல்லாம் மறைமுகமாக கீர்த்தி மேல் இருந்தது அவள் சிரிப்பில் ஒரு மின் துண்டிப்பு திடீரென உறக்க நிலைக்கான அவள் விழிகளின் பயணம் கீர்த்தி சற்று முன் நிலைக்கு எதிர்மறை தோற்றம் காண்பித்தாள். இந்த மாற்ற நிலை அவளை படம் போட்டு திரையிட்டது நிகழ்வுகள் நிறைவடைந்து அனைவரும் விடை பெற்றனர். அர்த்தனா அவள் நினைவுகளை கீர்த்தியிடம் விட்டு விட்டு அவளும் கடந்து சென்றாள். அன்று இரவு பகலானது ஏதோ ஓர் சலனம் விடியலும் சலிப்பாக ஏதோ ஒரு உந்தல் கீர்த்தியை பார்த்தால் என்ன எப்படி என்று சிந்தித்தபடி பாடசாலைக்கு கடந்து சென்றாள் அதிபரின் அனுமதிக்காக காத்திருந்தாள். அறிமுகமானவர் அர்த்தனா அங்கு பிள்ளைகள் பலர் ஓடி வந்து அர்த்தனா மிஸ்.... சிரித்து குழைந்து உங்களைத் தெரியும் என்றும் மீண்டும் அறிமுகம் செய்வதாய் அழாவளாவிச் சென்றனர். மனம் கீர்த்தியின் பால் இருந்ததால் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை சிரித்து விடையளித்தாள்.

      கூட்டமாய் பேசிய சிலருடன் தனியாகப் பேச அதிபரிடம் அனுமதி பெற்றாள் அர்த்தனா இரண்டு மூன்று பிள்ளைகளுடன் நாம் பேசிவிட்டு கீர்த்திக்காய் காத்து இருந்தாள். அதே குறும்பு என்னை விட யாரும் இல்லை மகிழ்ந்திருக்க என்று மரம் செடி கொடிகளை இரண்டு கைகளாலும் கிள்ளிக் தட்டி காற்றுக்கும் ஊற்றிக்கொடுத்து ஓடிவந்து "அர்த்தனா அக்கா........ என்று உரைக்க அழைத்தாள். வாங்கம்மா எப்படி இருக்கீங்க உட்காருங்கள் பேசலாம் என்று இருக்கையை விரல் நீட்டினாள் "தனியா என்ன அக்கா பேசணும்" ? கீர்த்தி அக்கா உங்களோட மட்டும் இல்லடா எல்லார் கூடவும் பேசுவனம்மா இப்போ உங்கள் நேரம் என்றாள் அர்த்தனா.

அப்படியா அக்கா எப்படி என்னுடைய பெயர் கீர்த்தி என்று நினைவு வச்சிருக்கீங்க என்ன? எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் இண்டைக்கும் நீங்க சூப்பரா புடவை கட்டி வந்து இருக்கீங்க என்று நெகிழ்ந்து நெருக்கமானாள்.


 இன்னும் ஏதோ நம்பிக்கை ஈர்ப்பு நெருக்கம் அர்த்தனாவின்பால் ஈர்ந்தது அவளை... அர்த்தனா அக்கா என்று தொடர்ந்தாள்....... எனக்கு அக்கா இல்ல உங்களை என்னோட அக்காவா நினைக்கவா? எங்க வீட்டுக்கு நீங்க வர முடியுமா? என்றாள். நிச்சயமாக ஒருநாள் வருகின்றேன் பதிலளித்த படி கீர்த்தி வீட்ல யாரெல்லாம் இருக்கிறாங்க கதை நகர்த்தினாள் அர்த்தனா. 

 என் வீட்ட நானும் அம்மாவும்....... உடன் நிசப்தமாய் நிறுத்திக் கொண்டாள். அர்த்தனா சிந்தித்தாள் எப்படிக் கேட்பது ஏன் அப்பாவைப் பற்றி ஏதும் சொல்லாமல் நிறுத்திவிட்டாள் அப்படியே சிந்தித்தபடி உங்க அப்பாவின் தொழில் என்ன? என கேட்டாள். கீர்த்தி நேர் எதிர் உணர்வுகளை கூட்டிப் பெருக்கி கழித்து புரியாத விபரிப்பால் விழுங்கி உமிழ்ந்தாள்.

சில வினாடிகள் தனித்து அப்பா!.... வெளிநாட்டில் என்றாள். ஓ கீர்த்திமா அக்கா உங்கள கஷ்டப்படுத்தியது போல் பேசிட்டேனா? உடலை நிமிர்த்தி முன் சாய்ந்து அவள் கண்களை எதிர் நோக்கினாள். அக்கா தொனி குறுகி மிகவும் அடங்கி ஒலித்தது. கீர்த்தி இன்னும் இறுக்கி மூடிக்கொண்டாள் அர்த்தனா அவளை திறக்க முனைந்தாள். காலையில் என்ன சாப்பிட்டீங்க கீர்த்தி? இடியப்பம் அக்கா.... உங்களுக்கு விருப்பமானவங்களை பற்றி பேசுவமா? மறுநொடியே ஓ..... ஆமா எனக்கு எலான் மாஸ்க் பிடிக்கும் எனத் தொடங்கி டாட்டா வரை பெரும் புள்ளிகளை விபரணமாக்கினாள் கீர்த்தி. 12 வயதில் இத்தனை காத்திரமான அறிதல்கள் அவளிடம். அர்த்தனா முப்பதுகளின் பின்புதான் பிரபலங்களைத் தேடி படித்திருப்பாள். அவள் தொடர் துடிப்பு தேடல்களின் கார்த்திரம் திடீர் திடீர் அமைதி லாவா குழம்புகளின் கசிவு......... அர்த்தனா அவள் எண்ணச் சுனையில் அமைதியாய் சுழி ஓடிக்கொண்டிருந்தாள்.


அர்த்தனா அக்கா என்ன யோசிக்கிறீங்க அப்பா எனக்கு மடிகணனி வாங்கி கொடுத்து இருக்காரு அதுல தான் இது எல்லாம் பாப்பேன் என்றாள். அவளின் மனநிலை இப்போது வேறு ஒரு பிரதிபலிப்புடன் இன்னும் ஆழம் செல்ல ஆயத்தமானாள் அர்த்தனா தட்டிக் கொண்டே இருந்தாள்.

      அந்த நேரம் அர்த்தனாவின் அலைபேசி அழைத்தது அவளை கீர்த்திமா அக்காவோட அப்பா கூப்பிடுறாங்க கதைச்சிட்டு வரட்டா அனுமதி எடுத்தாள். "ஓமக்கா தாராளமா கதைங்க...........? சாப்பிட்டியாமா? இனிமேல்தான்பா... இங்கு ஒரு தங்கா கூட பேசிட்டு இருக்கேன்பா.... சரிமா அந்த பிள்ளை சாப்பிட்டதோ தெரியல இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு பேசுங்க...... அப்பாவின் தொடர்பாடல் அலைபேசி தாண்டி கீர்த்தியின் செவி வழி புகுந்தது அவள் நெஞ்சை நெருடி உடைத்து திறந்தது குனிந்தபடி இருந்தாள் கீர்த்தி. அலைபேசியை அணைத்து அர்த்தனா, கீர்த்தி.... என்றாள். கருவிழி கண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது அர்த்தனாவின் முயற்சிக்கு அப்பாவின் குரல் ஆதரவளித்தது போல மெல்ல திறந்தது அவள் இரும்புத் தாழ்பாள் இட்ட உள்ளக் கதவுகள்.. கீர்த்தியின் கைகளை பற்றியபடி, நம்புமா.... அக்காவ என்னாச்சும்மா? நேரடியாகவே வினா கொடுத்தாள்.

     கோடை வானம் மாரி போர்த்திக் கொண்டதுபோல் கண் தூறலனனாள் கீர்த்தி.தேக்கத்து சேமிப்பு கழிமுகம் காணுமா? எங்கே அவள் துடிப்பு? இருள் மறைத்து ஏமாற்றி இதம் காட்டிய பல்வரிசை எங்கே? மின்மினியாய் சிமிட்டி சிரித்த கருவிழி எங்கே? கதவுகள் மடைதிறந்த வாவியாய் பெருக்கெடுத்தாள்..... இத்தனை அடைசல்களின் காரணம் தான் என்ன? தேடலின் ஆழத்தில் அர்த்தனா அவளை என்ன செய்ய அணைக்கவா? கண் துடைக்கவா? தலை கோதவா? செய்கைகள் ஏமாற்றியவளாய் எழுந்து கீர்த்தியின் ஓரமாய் போய் தோள்களைத் தழுவிக்கொண்டாள். முட்டியிட்டு முகத்தின் முன் மண்டியிட்டபடி மனம் திறப்பாயா என்று பார்வை தெளித்தாள்.


அர்த்தனாவின் தொடுகை பார்வை இருக்கை நிலை இன்னும் இறுக்கம் தளர்த்தியது கீர்த்தி சற்று அமைதலானாள். மொழி கடந்த அர்த்தனாவின் உரையாடல் அவளுக்கு உணர்வழித்ததோ என்னவோ "ஒன்று சொல்லட்டுமா அக்கா......." என்று விம்மினாள் கீர்த்தி. அவளைத் தழுவியபடி சொல்லுமா அக்கா கூட இருக்கேன் என்று ஆறுதலாய் தாயானாள் அர்தனா.


     என்னோட அப்பா செல்வம், நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை அக்கா அம்மா ஜெனிதா, அப்பா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பாவுக்கு அக்காக்கள் நான்கு தங்கைகள் நான்கு நடுவில் என் அப்பா ஒற்றை ஆண் பிறவியாம். அவங்க குடும்பம் பெருசு தானே அக்கா அண்டைக்கு சாப்பிடவே கஷ்டமாங்க.. அப்பாட யாரோ ஒரு நண்பன் கப்பல்ல அவுஸ்திரேலியாவுக்கு போக வெளிக்கிட்டாராம் அப்பாவையும் கூப்பிட்டாராம் பெரிய அத்தை சின்னத்தை அம்மம்மா எல்லாரும் அப்பாவை போகச் சொன்னாங்களாம் அம்மா மட்டும் அமைதியாய் இருந்தாங்களாம் ஏன் என்றால் கல்யாணமான நான்கு மாதத்தில் பாவம் அம்மா அவங்க கற்பமா இருக்கிறாங்க என்டு கண்டுபிடிச்சே பத்து நாள்தானாம் அப்போ... அப்பா அடுத்த மாதமே வெளிக்கிட்டாராம் எல்லாருக்காகவும் அம்மாவும் ஒத்துக் கொண்டார்களாம். இப்பவும் அம்மா..,... ஏதோ சொல்லாமல் விழுங்கிக் கொண்டாள் 12 வருஷம் ஆச்சு இன்னும் அப்பா வரலக்கா அவர் வர ஏதாவது செய்யலாமா?

தேம்பித் தேம்பி அர்த்தனாவின் இயல்பை தூண்டி கண் நிறைக்க கதை சொன்னாள் கீர்த்தி.

  அர்த்தனா கீர்த்தியின் கைகளை விடவே இல்லை 12 வயது தோற்றம் இல்லை பார்ப்பதற்கு 16 வயது காண்பிக்கும் தோரணை பிஞ்சு இன்னும் என்ன சொல்லி இடி போடப் போகிறாளோ? என் இதயத்தில் என்று ஏக்கத்துடன் ஒத்துணர்வழித்தாள். கீர்த்திமா அழாதடா நீண்ட நேர அடைமழையின் பின் குடைபிடிப்பதாய் ஓர் இடைநிறுத்தம் அழாதமா என்றாள் அர்தனா? அடுத்த நொடியே அவலக் குரலில் அக்கா என்று எத்தணித்தாள்..... சாமத்தியம் ஆகாட்டால் குழந்தை பிறக்குமா? பெரும் வினா


ஏன் இந்த மழலைக்கு மனசோரம் பேர் இடியோ? இத்தனை பாரமான ஐயப்பாடு வினாவினாள்? கண்கள் விரிய கைகள் குளிர்ந்து ஈரமாக வெட்கத்துடன் ஏக்கமாய் பார்த்தாள் கீர்த்தி. அர்த்தனா இன்னும் புரிந்து கொண்டாள். பூப்படையாத கீர்த்தி..... அர்த்தனாவின் கைகளை இறுக்கிக் கொண்டாள் உடல் நடுங்கியது சாரலும் தூவானமுமாய் மூக்கு சிந்த உரத்து அழுதபடி அர்த்தனாவின் பிடியை நகர்த்தி தன் இரண்டு கைகளாலும் வாயை இறுக்கி மூடி ஓலமிட்டபடி உரத்த சத்தத்தையும் உணர்வையும் அடக்கி கொள்ள நினைத்து முடியாதவளாய் கொதிநீர் குவளயாய் தெறித்து வெடித்தாள் கீர்த்தி. வகுப்பறை நிறைத்த ஓலம் அர்த்தனாவின் அனுபவத்தில் இப்படி ஒரு துணைநாடியை சந்தித்ததேயில்லை அங்கலாய்த்துப்போன அவள் கீர்த்தியை மார்போடு அணைத்துக் கொண்டாள் முதுகு தட்டி தலைகோதி என்னம்மா ஆச்சு அக்கா கூட இருக்கேன்மா என வார்த்தை வஞ்சம் செய்ய மூர்ச்சை இழந்து விட்டபடி இடியேறுமரமாய் மலைத்துப் போனாள். பிஞ்சு வெடித்து சிதறுகின்றதே என்ன இது இறைவா என்று விண்ணப்பம் செய்தாள். அழுகையுடன் அக்கா யாரிடமும் சொல்ல மாட்டீங்களே தயங்கித் தவிர்த்து விக்கி விழுங்கினாள் கீர்த்தி .அர்த்தனா நெற்றி நீவி பக்கம் போனாள் பார்வையால் உறுதியளித்து பதிலளித்தாள். நம்புடாமா என்றாள்.


    அக்கா என் அம்மாவுக்கு ஒரு நண்பர் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார் ஒரு நாள் அம்மா இல்லாதப்போ அவர் என்ன...... நீள அழுதாள் கைகளால் இறுக்கி வாய்மூடி ஓலமிட்டாள் இறைவா அர்த்தனாவால் அவளை அணைக்க மட்டுமே முடிந்தது. அணையாத தீயை அணைக்க அவளால் கூடாமல் போனது. கீர்த்தி சொற்களை பற்களில் சிக்கி நாக்கில் தடுக்கிக்கொள்ள அணை கடந்த வெள்ளமாய் காட்டாறாகினாள். கீர்த்தியின் ஓலம் அர்த்தனாவுக்கு காட்சியாய் ஓடியது.

   வஞ்சகன் தன்னை வக்கிரமாய் சிதைத்ததை சின்னாபின்னம் செய்ததை சொல்லாமலேயே சொல்லி முடித்தாள். அதிர்ந்து வேளம் உண்ட வெள்ளிக் கனிபோல் உள்ளீடற்று ஊமையானாள் அர்த்தனா.

குடும்பம் காக்க வெளிநாட்டில் தந்தை நண்பர் வடிவில் வக்கிர தாண்டவங்கள். தாயின் தோழன் பெயரில் தாய்க்கொரு தாலாட்டு இரண்டாம் உடல் துணை. கனி சுவைத்த குரங்கிற்கு பூவின் மேல் ஒரு வெஞ்சம். மாலையாகு முன் பிய்த்து சிதைத்து உதிர்த்து போட்டதோ....

    ஆற்றல் இழந்த ஆற்றுப்படுத்துணராய் ஈரமாக்கப்பட்ட கண்ணீர் கசியும் சேலை தலைப்பினால் கீர்த்தியின் முகத்தை துடைத்து வார்த்தையால் தாலாட்டி மடியோடு அவளை சாய்த்து கொண்டாள்.

   நீறுபூத்த நெருப்பாய் எப்படி தன்னை காட்டிக் கொண்டாள். நீர் அடி பனிப்பாறையில் மிதந்தும் தெரியாமல் மறைந்தே இருந்தது இவள் மனக்குமுறல்கள். மூச்சுக்காற்றில் அக்கினி வீசியபடி புயலுக்கு அப்பால் அமைதலான கடலாய் விழிகளை இறுக்கி மூடி திறந்த வாயினால் சுவாசித்தபடி வண்டு கலைத்த மகரந்தம் தொலைந்த இடம் தேடும் தென்றலாய் இமைக்கா பார்வையை அவள் மீது குவித்து மடி தாங்கி நின்றாள் அர்த்தனா.


  பிரம்மியா சண்முகராஜா


புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...