2/28/2023

 "வின்னி மண்டேலாவின் வாக்குமூலம்"

                மகுடம் பதிப்பக வெளியீடு 

நூலாசிரியர்  

                       மு.தயாளன்

வின்னி மண்டேலா 

தென்னாபிரிக்கா நாட்டின் விடுதலை வீரன் நெல்சன் மண்டேலாவின் துணைவியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு 

சுயசரிதம் போன்ற அமைப்பில்  இந்நூல் நகர்கின்றது. நெல்சன் மண்டேலா  கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், வெள்ளையர் அரசு வின்னி மண்டேலாவை படாதபாடு படுத்த ஆரம்பித்தது. 36 வயதுக்குள் பல முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒரு முறை 491 நாள் சிறையில் அடைபட்டார். 

அனுபவித்த சிறைவாசம் பற்றி இப்படி எழுதுகிறார்... ‘‘இந்த தண்டனையின்போது என் அறை மிகவும் சிறியது. கை கால்களை நீட்டினால் பக்கவாட்டு, மேற்சுவர்கள்  இடிக்கும். யாரையும் சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். இது உயிருடன் என்னை கொல்வதற்கு சமம்! மூச்சு  விட்டதால் நான் உயிருடன் இருந்தேன். ஆனால் என் மதிப்பு, மரியாதையெல்லாம் போனது. எனக்கு தெரியாத வலியே

இல்லை. அந்த அளவுக்கு என்னை வெள்ளையர் அரசு பாடாய் படுத்தியது."

 இது மட்டுமா? 13 வருடங்கள் பிரன்ட்போர்ட் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்த வீட்டில் தண்ணீர்,  மின்சாரம் கிடையாது. வெள்ளையர் அரசுக்கு பயந்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வர மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.  ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப குத்தினால் என்ன ஆகும்? குந்திய இடம் மரத்துப் போகும்! நரம்புகளும் கூட, மரித்துப்  போகும்!’’அது மட்டுமல்ல 14 வயது இளைஞன் ஒருவன் கொலைக்கும், மற்றொரு நபர் கொலைக்கும், வின்னி  மண்டேலாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டார்.

      வின்னி மண்டேலா வெள்ளையர்களுக்கே பயத்தின் அடையாளமாக திகழ்ந்த பெண்மணி, உண்மையில் ஆண்டாண்டு காலங்களாக அழுத்தப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலைக்கு மட்டுமன்று, ஒடுக்கப்படும் பெண்களுக்கும் அரசியலில் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். துணிவாக வின்னி மண்டேலா வெள்ளையர்களின் போக்கிலே சென்று வெற்றியை தனதாக்கியவர்.அடிமைகளாக தங்களை தாங்களே தாழ்த்தியது போதும் என்று அவருக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடையை கண்டுப்பிடித்து செயலில் காட்டியவர்.வெள்ளையர்கள் வீதியில் செல்லும் போது கறுப்பர்களை கண்டால் விலகி நடக்கும் அளவிற்கு மாற்றத்திற்கு வித்திட்டவர்.

       சமூக விடயங்களில் அக்கறை காட்டாமல் இருந்த வெள்ளையர்கள் வின்னி மண்டேலாவின் செய்கைகளால் கலங்கி போனார்கள்.இது கறுப்பர்கள் மத்தியில் ஒரு வித மன உறுதியை அடையச் செய்தது. கறுப்பின மக்களை உழுவு இயந்திரத்தை இயக்குவதற்காக குறைந்த வேதனத்தில் அடிமைகளாக நடத்தப்பட்டனர் வின்னி மண்டேலாவின் கைகளில் விலங்கிடப்பட்டப் போது அங்கே தான் கறுப்பின மக்களின் விடுதலைக்கான விதை விதைக்கப்பட்டது. வெள்ளையர் அதிகமாக வாழ்ந்த பகுதியில் வின்னி மண்டேலா அழைத்து வரப்பட்ட போது மாற்றம் நிகழத்தொடங்கிற்று. வெள்ளையர்கள் எங்கு அதிகமாக கூடி இருந்தார்களோ அங்க அவளும் இருப்பாள். பசியால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நண்பர்களுடன் இணைந்து பசி போக்கும் பணியில்....... ஈடுப்பட்டாள்ஆனால் அதுவும் போதியளவு வசதியினை ஏற்படுத்தக்கூடியதாகஅமையவில்லை.என்பதே கவலையே!வைத்தியசாலை இருந்தும்  மருத்துவர்களோ, மருந்துகளோ இல்லாமையால் கறுப்பின மக்கள் துன்பங்களிலே தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களாய் காணப்பட்டார்கள். வின்னி மண்டேலா ஒரு சம்பவத்தை இங்கே சொல்கின்றார் அவரால் தத்தெடுக்கப்பட்ட பெண் கர்ப்பமாய் இருந்த நேரத்தில் குழந்தையின் தலை திசை மாறி இருந்ததால் போதிய வைத்திய உதவியின்மையால் மரணத்தை தழுவியதாக குறிப்பிடுகின்றார். இந்நிகழ்வு அவர் மனதை குத்தி கிழித்தது. நிறவாதத்தின் கொடுமைகள் ஏற்றுக்கொள்ளவே முடியாவளாய் அவளுள் அடக்க முடியாத சுவாலை எரிய ஆரம்பித்திருந்தது. 

வைத்தியசாலைகள் இருந்தும் கறுப்பர்களுக்கு சிகிச்சை என்பது மிக மிகக் கடினமாகவே இருந்தது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மனிதாபிமான திட்டமாக உணவு சூப் வழங்க ஏற்பாடு வின்னி மண்டேலாவின் தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 

கறுப்பின மக்களின் சுகாதார விடயங்களில் அக்கறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. தங்களுக்குத் தேவையான உணவுகளை வீட்டு தோட்டத்தினூடாக பெற்றுக்கொள்ள  முடியுமாயிருந்தது. 

ஆனால் அடுத்த பிரச்சினையாக நீரினை பெறுவது.துன்பங்கள் தொடர்கதையானது. உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.கடைசி ஆயுதமாக வின்னி மண்டேலா பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.பெண்களை கிளர்தெழுச் செய்தார்.போராட்டமே அவர் வாழ்க்கையானது.அபூர்வ பெண்மணியாக கறுப்பு தேசத்தின் அசைக்க முடியாத வீர மங்கையானாள்.அறவழி போராட்டம் ஆயுத போராட்டமாகியது. தன் கணவரின் மீதான காதல் பற்றிய அவரின் குறிப்பில்....... அருகருகே இருந்தும் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நெல்சன் மீது கொண்ட காதல் அவருள் புதியதொரு சக்தி பரவுவதாகவும்,

இந்த சக்தியே அவரை உற்சாகமாக செயற்பட வைத்ததாகவும் குறிப்பிடுகின்றார். அவர்களின் வாழ்க்கை அழகாக மகிழ்ச்சியாக நகர்ந்த போதே வெள்ளையர்களால் சிறைக்கு செல்ல நேரிட்டது.

பேசப்படாத பல பாேராட்ட உண்மைகள் அவளுள் புதையுண்டு போனது.திருமண வாழ்வில் விரிசல்.......... 1990-ல் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வந்ததும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். 1992ல் பிரிந்து, 1996ல்  விவாகரத்து பெற்றனர். 1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் வின்னி.இறக்கும்  வரைகூட  நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தொடர்ந்தார். 1994-96ம் ஆண்டுகளுக்கு இடையே கருப்பர் ஆட்சியில், இணை அமைச்சராக இருந்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில்  பதவிநீக்கம் செய்யப்பட்டார். 

இதனிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெண்கள் அணிக்கு தலைவியாக இருந்தார். நெல்சன் மண்டேலாவின்  இறுதி காலத்தில் சிறிது காலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட பெண்மணியாக வாழ்ந்த வின்னிமண்டேலா  நிச்சயம் ஒரு வித்தியாசமான பெண்மணி தான்!



இன்றும் தென்னாபிரிக்காவின் தேசிய அன்னை என மதிக்கப்படுகின்றார்.

   

திருகோணமலை றொசில்டா அன்டோ      

 இப்பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் 

எத்துணை பெரிய 

அதிசயத்தையும் நிகழ்த்தலாம் ....


வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு...

பயணங்கள் வேறு...

சிலரின் பயணத்தில் 

வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்...

வலிகள் இன்றி அவர்கள் 

பயணம் செய்யலாம்....

ஒரு சிலருக்கோ 

பயணத்தில் வழிகளை 

உருவாக்க வேண்டி வரலாம்...

வலிகள் நிறைந்த 

பயணமாக கூட அது இருக்கலாம்...

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.... 

உங்கள் வலிகளுக்கான 

பல மடங்கு பலன்கள் 

நிச்சயம் கிடைக்கும்...


வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இயற்கை 

ஒரு புது வழியையே உருவாக்கலாம்....

உங்களுக்கான பாதைகள் 

உங்களை வாழ்வில் மிகச் 

சிறந்த நிலைக்கு 

கொண்டுச் செல்லலாம்...

ஆகவே.....

பாதைகள் எப்படி இருந்தாலும் உங்களை நம்பி பயணத்தை தொடருங்கள்....

உங்கள் பயணம் 

நிச்சயமாக சிறப்பாக இருக்கும்....

இன்று நீங்கள் 

படும் கஷ்டங்களை வைத்து 

நாளை உங்கள் வாழ்க்கையை 

நிர்ணயித்து விடாதீர்கள்....

நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.

நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருப்போம்... 

நிச்சயம் நல்லதே நடக்கும்...

SsShafeena ❣️

புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி - ஊர்துஜா

  ஊர்துஜா   ஒரு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இளவரசி , மொராக்கோவை சேர்ந்த முஸ்லிம் பயணி   இபின் பதூதாவின்   பயணக் குறிப்புகளில் (1304 - க...